அமரன்
நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தவர் முகுந்த் வரதராஜன்.
இவருடைய வாழ்க்கை தான் அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து வெளிவந்த அமரன் படத்தின் ட்ரைலர் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், அமரன் படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் துவங்கியுள்ளது. இதுவரை வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 50 லட்சத்திற்கும் மேல் அமரன் படம் வசூல் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமரன் படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.