பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது முதல் வாரத்திலேயே பரபரப்பாக மாறி இருக்கிறது. போட்டியாளர்கள் இடையே சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை வந்துகொண்டிருக்கிறது.
மேலும் கன்டென்ட் கொடுக்கவேண்டும் என திட்டம் போட்டு ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் அடிதடி சண்டை போடுவது போல பிராங்க் செய்ததும் பல்வேறு சிக்கல்களை பிக் பாஸ் வீட்டில் கொண்டுவந்தது.
ரவீந்தர் உடன் இதற்காக மற்ற போட்டியாளர்கள் பலரும் சண்டை போட்டு இருக்கின்றனர்.
எலிமினேஷன்
இந்நிலையில் முதல் வார இறுதியில் எலிமினேஷன் யார் என்கிற தகவல் உறுதியாக வந்திருக்கிறது. ரவீந்தர் தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
நான் reviewer, எனக்கு இந்த கேம் எப்படி விளையாடனும் என எனக்கு தெரியும் என சொல்லி பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களை அவர் வம்பிழுத்து வந்த நிலையில் தற்போது எலிமினேட் ஆகி இருக்கிறார்.