சினிமா நடிகைகள் அவர்களின் அழகில் தனி கவனம் செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஃபிட்டான உடலுக்கு பின் இருக்கும் ரகசியம் குறித்து கீழே காணலாம்.
சமந்தா:
ஃபிட்டான உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று உணவு குறிப்பாக காலை உணவை ஆரோக்கியமானதாக மாற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று அதன் படி, சமந்தா நட்ஸ் மற்றும் விதைகளால் சேர்க்கப்பட்ட பழங்களை தான் காலை உணவாக எடுத்து கொள்கிறார் என கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா:
ராஷ்மிகா மந்தனா உணவு மேல் மிகவும் விருப்பம் உடையவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த பழம் மற்றும் கீரை, காளான் வகைகளை எடுத்து கொள்வார் என கூறப்படுகிறது.
நயன்தாரா:
நயன்தாரா ஊட்டச்சத்தை பெறுவதை உறுதிசெய்ய உதவும் பிரத்யேகமாக டயட்டை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. நயன்தாரா மட்டுமில்லாமல் பல நடிகைகள் அவர்கள் எடுத்து கொள்ளும் உணவில் மிகவும் கவனம் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.