பொன்னியின் செல்வன்
பிரமாண்ட படைப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மணி ரத்னம் இயக்கியிருந்தார். அமரர் கல்கி எழுதிய நாவலை மையமாக கொண்டு பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வெளிவந்தது.
இதில் 2022ஆம் ஆண்டு முதல் பாகமும், 2023ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இதில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் 1. விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்றுடன் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்து 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். பொன்னியின் செல்வன் இரண்டு ஆண்டுகள் நிறைவு குறித்து ஆதித்த கரிகாலன் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் வசூல்
இப்படியிருக்க தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய திரைப்படமாக இருக்கும் பொன்னியின் செல்வன் 1 உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.. பொன்னியின் செல்வன் 1 உலகளவில் ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 225 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் இதுவே ஆகும். இதுவரை இந்த சாதனையை வேறு எந்த திரைப்படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#twoyearsofponniyinselvan #adithakarikalan pic.twitter.com/JAGyfoddD3
— Vikram (@chiyaan) September 30, 2024