மாவீரன்
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாவீரன்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் வில்லனாக மிஸ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் படத்தின் பலமாக அமைந்தது.
மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் வரும் அசரீரி குரல் மூலம் மாஸ் காட்டியிருப்பார்.
இப்படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாவீரன் திரைப்படம் உலகளவில் ரூ. 89 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.