சிவாஜி
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி தி பாஸ்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை ஸ்ரேயா சரண், சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி மற்றும் ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது.
17வருடங்கள்
இன்றுடன் இப்படம் வெளிவந்து 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதனை #17YearsOfSivajiIndustryHit என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 156 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படமாகவும் சிவாஜி தி பாஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.