பிகில்
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில். விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ இயக்கிய இப்படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷரோஃப், டேனியல் பாலாஜி நடித்திருந்தனர். இரட்டை வேடத்தில் விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும், பிகில் படத்தில் கால்பந்து வீரராக மட்டுமல்லாமல், ராயப்பன் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டி இருப்பார் விஜய்.
5 ஆண்டுகளை கடந்த பிகில்
மக்களால் 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று கொண்டாடப்பட்ட இப்படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் நிலையில், படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிகில் திரைப்படம் உலகளவில் ரூ. 295 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. பிகில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த திரைப்படம் கோட் என்பது குறிப்பிடத்தக்கது.