கபாலி
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கபாலி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார்.
[NTJ67 ]
மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்று ஒவ்வொரு பாடல்களும் நம் மனதில் இடம்பிடித்தது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்களிடையே சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது என்கின்றனர்.
8 ஆண்டுகள்
கபாலி திரைப்படம் இன்றுடன் வெளிவந்து 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் 8years of கபாலி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், கபாலி திரைப்படம் செய்த வசூல் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, கபாலி திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கேரளாவில் ரூ. 15.5 கோடி, கர்நாடகாவில் ரூ. 34 கோடி, ஆந்திரா – தெலுங்கானாவில் ரூ. 39 கோடி மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற இடங்களில் ரூ. 42 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் ரூ. 108 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
இதன்மூலம் மொத்தமாக கபாலி திரைப்படம் உலகளவில் ரூ. 313.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கூறுகின்றனர். இதுவே கபாலி படத்தின் ஒட்டுமொத்த வசூல் என சொல்லப்படுகிறது.