Monday, March 17, 2025
Homeசினிமாவெளிவந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி படம்.. வெறித்தனமான அப்டேட்

வெளிவந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி படம்.. வெறித்தனமான அப்டேட்


 சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் SK23வது படம் உருவாகி வரும் நிலையில், அவரது 25வது படமான பராசக்தி படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே படக்குழுவினர் அறிவித்தனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.

 வெறித்தனமான அப்டேட் 

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் பராசக்தி படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இப்படத்தின் பணிகள் 5 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ஆகியோரின் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறதாம்.  

வெளிவந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி படம்.. வெறித்தனமான அப்டேட் | Sivakarthikeyan Movie Update

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments