Thursday, February 13, 2025
Homeசினிமாவெளிவந்த 10 ஆண்டுகள் ஆகும் வேலையில்லா பட்டதாரி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

வெளிவந்த 10 ஆண்டுகள் ஆகும் வேலையில்லா பட்டதாரி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா


ஒவ்வொரு நடிகர்களின் திரை வாழ்க்கையில் முக்கியமான கட்டங்களில் ஒன்று 25வது திரைப்படம். மற்ற படங்களை விட 25வது, 50வது, 100வது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

வேலையில்லா பட்டதாரி


அப்படி மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி. இது நடிகர் தனுஷின் 25வது திரைப்படமாகும். 2014ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை வேல்ராஜ் இயக்கியிருந்தார்.



இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சரண்யா, சமுத்திரக்கனி, அமலா பால், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் பட்டதாரி இளைஞர்களின் பிரதிபலாமாக இப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார் தனுஷ்.



ஆக்ஷன், அம்மா செண்டிமெண்ட், பாடல்கள், எமோஷனல் காட்சிகள், நகைச்சுவை என படத்தில் எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் நகரும். இந்த நிலையில், இன்றுடன் தனுஷ் 25வது படம் வேலையில்லா பட்டதாரி வெளிவந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.


இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் இருந்து 10 years of VIP என பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

[0R852QQ ]

வசூல் 


அதன்படி, வேலையில்லா பட்டதாரி திரைப்படம் உலகளவில் ரூ. 60 – ரூ. 65 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறுகின்றனர். இது தனுஷின் திரை வாழ்க்கையில் மாபெரும் வசூல் செய்த திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments