ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய படம் வெளிவருகிறது என்றால், கண்டிப்பாக வசூல் வேட்டையன் நடக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
வேட்டையன்
ஜெயிலர் படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அதை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், துஷாரா விஜய, பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என பலரும் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இன்று வேட்டையன் வெளியாகியுள்ளது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் வேட்டையன் பத்ம ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். அதே போல மொத்த ப்ரீ புக்கிங் வசூல் ரூ. 65 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல் ரூ. 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.