வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் அளவில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று வேட்டையன் படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 10ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
விடாமுயற்சி டீசர்
இந்த நிலையில், வேட்டையன் படம் வெளிவரும் அதே நாளில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் டீசரை திரையிட தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். ஆனால், இது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.