வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – TJ ஞானவேல் கூட்டணியில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வேட்டையன்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். மேலும், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வசூல்
இந்த நிலையில் 17 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள வேட்டையன் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 248 கோடி வரை வசூல் செய்துள்ளது.