இன்றைய தேதியில் இவருடைய இசை இல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதே இல்லை. ரஜினி, விஜய், அஜித் என பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
வேட்டையன்
அப்படி அனிருத்தின் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். பேட்ட, ஜெயிலர் படங்களை தொடர்ந்து அனிருத் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் வேட்டையன் படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, பகத் பாசில், அபிராமி, ரக்ஷன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அனிருத் சொன்ன விஷயம்
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் வேட்டையன் படம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். இதில் படம் வெளிவந்தபின் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் “வேட்டையன் படத்தின் கதை மிகவும் வலுவானது. படம் வெளிவந்த பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படும்” என கூறியுள்ளாராம் அனிருத். இதனால் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.