Monday, April 21, 2025
Homeசினிமாவேட்டையன் ரிலீஸுக்கு இப்படி ஒரு பெரிய சிக்கலா.. சொன்ன தேதியில் வருமா?

வேட்டையன் ரிலீஸுக்கு இப்படி ஒரு பெரிய சிக்கலா.. சொன்ன தேதியில் வருமா?


ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதே தேதியில் வருவதாக முதலில் அறிவிக்கப்பட்ட சூர்யாவின் கங்குவா படம் தற்போது வேட்டையன் உடன் போட்டியிட விரும்பாமல் தயாரிப்பாளரால் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் வேட்டையன் படமே சொன்ன தேதிக்கு வருமா என்பது சிக்கலாகி இருப்பதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

சிக்கல்

வேட்டையன் படத்தில் பல என்கவுண்டர் காட்சிகள் வருவதாகவும், அவற்றில் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த உண்மை சம்பவங்கள் பற்றிய காட்சிகளுக்காக NOC வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், அதற்கு தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதனால் சொன்ன தேதியில் வேட்டையன் படம் வருமா என கேள்வி எழுந்து இருக்கிறது. இருப்பினும் படக்குழு அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருவதாகவும் நிச்சயம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறி இருக்கின்றனர். 

வேட்டையன் ரிலீஸுக்கு இப்படி ஒரு பெரிய சிக்கலா.. சொன்ன தேதியில் வருமா? | Will Rajinikanth S Vettaiyan Release As Planned

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments