வேட்டையன்
TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா சுபாஷ்கரன் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் வேட்டையன்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். மேலும் ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா, அபிராமி, ரோகிணி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
வெற்றி விழா
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
இந்த நிலையில், வெற்றிக்கு அனைவரும் நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினருக்கு விருந்து பரிமாறப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங் மற்றும் இயக்குனர் TJ ஞானவேல் ஆகியோர் படக்குழுவினர்களுக்கு உணவு பரிமாறியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..