வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வேட்டையன்.
TJ ஞானவேல் இயக்கிய இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் வந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
வசூல்
ரஜினிகாந்த் படம் என்றாலே வசூலில் பல சாதனைகளை படைக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், முதல் வாரம் இறுதி வரை வேட்டையன் வசூலில் பட்டையை கிளப்பி வந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக வசூலில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், வேட்டையன் படம் 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 8 நாட்களில் ரூ. 223 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.