பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 1,220 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் இந்த தொடர் விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.
நடிகரின் பதிவு
இந்த தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் சதீஷ். இந்த சீரியலில் வில்லனாக இருந்து வரும் இவர் அதனால் நிஜத்திலேயே மக்களின் கோபத்திற்கு அதிகம் ஆளாகியிருக்கிறார்.
சீரியலை சீரியலாக மட்டும் பாருங்க என்று நிறைய பதிவுகள் போட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென சதீஷ் தனது இன்ஸ்டாவில், ஒரு பொய்யை முத்தமிடுவதை விட உண்மையிடம் அரை வாங்கிக் கொள்ளலாம் என பதிவு செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் நெருங்கிவிட்டது என்றும் பதிவு செய்திருக்கிறார்.