ஸ்டார்
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியர் பிரேமா காதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளன்.
இவர் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் கடந்த மே கடந்த 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் முக்கிய ரோலில் அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
வசூல்
ஸ்டார் படத்திற்கு சிலர், படம் சூப்பராக இருக்கிறது என்றும் சிலர் படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்றும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டார் படத்தின் இயக்குனர் இளன், ” ஸ்டார் திரைப்படம் 12 கோடி பட்ஜெட்டில் உருவாகி 26 கோடி வரை வசூல் செய்தது. படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது” என்று இளன் தெரிவித்துள்ளார்.