Thursday, October 10, 2024
Homeசினிமாஹரிஷ் கல்யாண் பட நடிகை மீது எப்ஐஆர் பதிவு.. தயாரிப்பாளர் எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்...

ஹரிஷ் கல்யாண் பட நடிகை மீது எப்ஐஆர் பதிவு.. தயாரிப்பாளர் எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார் பாருங்க


ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹீரோயினாக நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. அவருக்கு படங்களில் வாய்ப்புகள் குறைந்ததால் வெப் சீரிஸில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ஹிந்தியில் ஷோஸ்டாப்பர் என்ற சீரிஸில் நடித்து இருக்கிறார். அதற்காக அவருக்கு 27 லட்சம் ருபாய் சம்பளமாக தரப்பட்டுவிட்டதாம். அதற்கு பிறகும் தயாரிப்பாளரிடம் பணம் கறக்க திட்டம்போட்ட நடிகை ஒரு மோசடியை அரங்கேற்றி இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அக்ஷய் குமார் பெயரில் மோசடி

எனக்கு நடிகர் அக்ஷய் குமாரை நன்றாக தெரியும். அவர் மூலமாக வெப் சீரிஸை ரிலீஸ் செய்யலாம் என சொல்லி இருக்கிறார் திகங்கனா சூர்யவன்ஷி. அதை நம்பிய தயாரிப்பாளர் அது பற்றி மேலும் கேட்டபோது அக்ஷய் குமாரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஆறு கோடி ருபாய் தரவேண்டும் என கூறி இருக்கிறார்.

அக்ஷய் குமார் டீமில் இருந்து ஒருவர் பேசினால் பணம் தர தயார் என தயாரிப்பாளர் கூறிய நிலையில், திகங்கனா சூர்யவன்ஷி எப்படியாவது பணம் வாங்கலாம் என பல விஷயங்களை மோசடியாக கூறி இருக்கிறார்.

முழு வெப் சீரிஸ் இருக்கும் ஐபேடை வாங்கி வைத்துக்கொண்டாராம் அவர். அதன் பின் அக்ஷய் குமாரை அறிமுகப்படுத்த முடியாது என சொல்லிவிட்டாராம். இது பற்றி போலீசில் தயாரிப்பாளர் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

ஹரிஷ் கல்யாண் பட நடிகை மீது எப்ஐஆர் பதிவு.. தயாரிப்பாளர் எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார் பாருங்க | Fir On Digangana Suryavanshi For Cheating Producer

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments