Thursday, January 2, 2025
Homeசினிமாஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் அழகிய ட்ரைலர்..

ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் அழகிய ட்ரைலர்..


ஹலிதா ஷமீம்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஹலிதா ஷமீம். இவர் பூவரசன் பீபி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதன்பின் சில்லு கருப்பட்டி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

தொடர்ந்து ஏலே எனும் படத்தையும் இயக்கினார். புத்தம் புது காலை எனும் ஆந்தாலஜி படத்தில் லோனர்ஸ் எனும் பகுதியையும் இயக்குனர் ஹலிதா ஷமீம் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்மினி ட்ரைலர்



இவருடைய அடுத்த படைப்பு தான் மின்மினி. இப்படத்தை 8 ஆண்டுகளாக இயக்கி வருகிறார். நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தையும், இளம் வயது பருவத்தையும் காட்ட வேண்டும் என்பதற்காக 8 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்த இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் அழகிய ட்ரைலர்.. | Halitha Shameem Minmini Trailer

இப்படத்தில் மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், மின்மினி படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments