சிறகடிக்க ஆசை
விஜய் டிவி என்றாலே சீரியல்களில் மக்களுக்கு இப்போது அதிகம் நியாபகம் வருவது சிறகடிக்க ஆசை தொடர் தான்.
மற்ற தொடர்களை போல ஒரு விஷயத்தை வைத்து அப்படி இழுக்காமல் அடுத்தடுத்து விறுவிறுப்பான ஸ்டோரியுடன் தொடர் நகர்கிறது. கடைசியாக மீனா காணாமல் போனார் என பரபரப்பாக கடைசியில் விஷயம் அட இதுதானா என முடிந்தது.
இப்போது விஜயா நானும் எனது திறமையை நிரூபித்து சம்பாதிப்பேன் என நடன பள்ளி தொடங்கி முதல் நாளிலேயே பிரச்சனை சந்தித்தார்.
மீனாவிற்கு நடனம் கற்றுக்கொடுக்கிறேன் என கழுத்து பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்.
நாளைய புரொமோ
இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில் நாளைய எபிசோடு புரொமோ வெளியானது. அதில் ஹாயாக நம்ம ரோஹினியின் மலேசியா மாமா சுற்றிவர அவரை மீனா கண்டுபிடித்துவிடுகிறார்.
அவரோ அய்யய்யோ ரோஹினி வீட்டில் இருக்கும் பெண் தானே இவர், நாம் கல்கத்தா செல்வதாக கூறி வந்தோமே என முழிக்கிறார். இதனால் அவர் மீனாவிடம் சிக்குவாரா அல்லது வழக்கம் போல் தப்பித்துவிடுவாரா என்பதை நாளை காண்போம்.
You May Like This Video