ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் ஷாருக்கான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது.
இப்படங்கள் உலகளவிய பார்வையாளர்களையும் கவர்ந்து ரூ. 1000 கோடி மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இந்த நிலையில், லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அந்த விழாவில் பேசிய ஷாருக்கான் பாலிவுட் சினிமாவிற்கும், தென்னிந்திய சினிமாவிற்கும் இடையே உள்ள தன் கருத்துகளை பற்றி கூறினார். மேலும், சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தென்னிந்திய சினிமா வெகுவாக உயர்ந்துள்ளது எனவும் பாராட்டி உள்ளார்.
காரணம் என்ன
அதை தொடர்ந்து, ஹாலிவுட்டில் நடிக்காதது ஏன் என்பதை குறித்தும் ஷாருக்கான் பேசியுள்ளார். அதில், இந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் எனக்கு கிடைத்த மரியாதையும், பாராட்டுகளும் மகத்தானது.
அதனால் என் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எனக்கு ஏற்ற கதை அமைந்தால் கண்டிப்பாக ஹாலிவுட்டில் நடிப்பேன் என்றும், தற்போது வரை அவ்வாறு கதை அமையவில்லை அதனால் ஹாலிவுட்டில் நடிக்கவில்லை என்றும் கூறினார்.