Friday, April 18, 2025
Homeசினிமாஹீரோயினாக அறிமுகமாகும் நடிகை குஷ்பூவின் மகள்? அம்மாவின் இடத்தை பிடிப்பாரா

ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகை குஷ்பூவின் மகள்? அம்மாவின் இடத்தை பிடிப்பாரா


குஷ்பூ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. கதாநாயகியாக கலக்கிக்கொண்டிருந்த இவர் தற்போது அரசியல், சீரியல் மற்றும் பட தயாரிப்பிலும் பிசியாக இருக்கிறார்.

இவர் இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அனந்திகா இயக்குநர் மணி ரத்னத்திடம் பணிபுரிந்து வருகிறாராம்.

அவந்திகா 

இந்த நிலையில், மூத்த மகள் அவந்திகாவும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்றும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் கூறுகின்றனர்.

இவருடைய போட்டோஷூட் கூட ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும். ரசிகர்களும் இவர் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக வருவார் என கூறி வந்தனர்.

ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகை குஷ்பூவின் மகள்? அம்மாவின் இடத்தை பிடிப்பாரா | Khushbu Daughter Avanthika Heroine Debut In Cinema

ஒருவேளை வெளிவந்துள்ள தகவலின்படி ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தால், தனது அம்மா குஷ்பூவை முன்னணி நடிகையாக வலம் வருவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments