பாலகிருஷ்ணா
தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. 1974ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி ஹீரோவானார்.
இவருடைய படங்களில் வரும் காட்சிகள் லாஜிக் மீறல்களாக இருந்தாலும் கூட அதனை ரசிகர்கள் கொண்டாட துவங்கிவிட்டனர். இவர் கையசைத்தால் ரயில் பின்னே செல்லும், காலால் எட்டி உதைத்தால் வேகமாக முன் நோக்கி வரும் கார் கூட பின் நோக்கி சென்று விடும்.
பாலகிருஷ்ணாவின் மகன்
இப்படி தன்னுடைய படங்களில் லாஜிக் மீற்றர்கள் மூலம் அட்ராசிட்டி செய்து மக்களை என்டர்டைன்மெண்ட் செய்து வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா தேஜாவும் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
என்.டி. ராமராவ்வின் மகனான இவர் கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் தற்போது இவருடைய மகனும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான், மோக்ஷங்கா தேஜா ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..