விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆன தொடர்களில் ஒன்று. நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பத்தில் இருப்பது தான் கதை.
இதில் முதல் தம்பி கதிர் ரோலில் நடித்து இருந்தவர் குமரன். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த்து. மேலும் கதிர் – முல்லை ரொமான்ஸ் காட்சிகளுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.
ஹீரோ
தற்போது குமரன் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறாராம். யாத்திசை என்ற படத்தை தயாரித்து இருந்த வீனஸ் இன்பொடெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
லக்கிமேன் பட புகழ் இயக்குனர் பாலாஜி வேணூகோபால் இந்த படத்தை இயக்குகிறாராம், இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்களாம்.