நடிகர் அஜித்
நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர்.
இவர் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார், படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது.
அங்கு நிறைய அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் படமாக்கப்பட்டு வந்தது, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
அதைப்பார்த்து ரசிகர்கள் அஜித் இவ்வளவு ரிஸ்க் எடுத்து படம் நடிக்கிறாரா என ஆச்சரியப்பட்டு வந்தனர். ஆனால் இடையில் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது, தற்போது தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் அஜித் குக் பேட் அக்லி படத்தில் கமிட்டாகி நடிக்கவும் தொடங்கினார். இப்பட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறதாம்.
செப்டம்பர் மாதம் படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஸ்பெயினில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
முதலில் ஜப்பானில் நடத்த முடிவு செய்துள்ளார்கள், ஆனால் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அங்கு மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் படப்பிடிப்பு இடத்தை மாற்றியுள்ளனர்.
குட் பேட் அக்லி படப்பிடிப்பை விரைவில் முடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.