அல்போன்ஸ் புத்திரன்
திரையுலகில் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமான நபர் அல்போன்ஸ் புத்திரன். நேரம் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படம் நல்ல வரவேற்பை கொடுத்தாலும், இரண்டாம் திரைப்படம் தான் தென்னிந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அது தான் பிரேமம். 2015ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்து தென்னிந்திய அளவில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
ரஜினி – அஜித்
இப்படத்தை தொடர்ந்து அவியல், கோல்ட் ஆகிய படங்களை இயக்கினார். மேலும் தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து கிபிட் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி – அஜித் குறித்து பேசினார்.
இதில் ரஜினி – அஜித் இருவரும் இணைந்து நடிக்கும்படி ஒரு கதை தன்னிடம் இருக்கிறது என கூறியுள்ளார். அவர்கள் இல்லை என்றால் கமல் – சிம்பு அதில் நடிக்கலாம் என கூறினார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.