அஜித் குமார்
தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஜனவரி மாதம் துணிவு படம் வெளியானது. ஆனால் இந்த வருடம் எந்த படமும் வெளியாகவில்லை.
தற்போது அஜித் கைவசம் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரண்டு படங்கள் உள்ளது. இந்த படங்களுக்கு பின், அடுத்த வருடம் முழுவதும் ஐரோப்பிய கார் பந்தையத்தில் கவனம் செலுத்தவுள்ள அஜித், ஒரு ஆண்டுக்கு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார் என கூறப்படுகிறது.
அந்த விஷயம்
இந்நிலையில், சென்னையில் இருந்து துபாய்க்கு செல்ல வந்திருந்த அஜித்க்குமாரை ரோபோ ஷங்கர் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டு ரோபோ ஷங்கர் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வீடியோவின் கீழ் அவர் ” நீண்ட நாட்களுக்கு பிறகு விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன். அன்புடன் அஜித் என்னிடம் நலம் விசாரித்தார். புது வருடத்தின் ஆரம்பம் AK உடன் சென்னை விமானநிலையத்தில் எதிர்பாரா சந்திப்பு. Happy new year to all” என பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.