ஆதிக் ரவிச்சந்திரன்
கடந்த ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மார்க் ஆண்டனி 2 பண்ணலாம் என விஷால் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்துள்ளது. இதை அறிந்த விஷால், முதலில் அஜித் சார் படத்தை முடித்துவிட்டு நம் படத்தை எடுத்துக்கொள்ளலாம் என கூறி, ஆதிக் ரவிச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளார்.
மீண்டும் ஆதிக் உடன் கூட்டணி
அதன்படி, குட் பேட் அக்லி படத்தை சிறப்பாக எடுத்துவிட்டாராம் ஆதிக். இவருடைய இயக்கத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்த அஜித், மீண்டும் இவருடன் ஒரு படம் பண்ணவேண்டும் என முடிவு செய்துள்ளார்.
ஆனால், தனக்காக ஆதிக்கை விஷால் அனுப்பி வைத்தது போல், முதலில் மார்க் ஆண்டனி 2 படத்தை முடித்துவிட்டு, அதன்பின் மீண்டும் நாம் இருவரும் புதிய படத்தில் கூட்டணி அமைக்கலாம் என அஜித் கூறியுள்ளாராம்.
ஆகையால், குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி 2 படத்தை இயக்கவுள்ளார். அதன்பின் மீண்டும் அஜித்துடன் கைகோர்க்கப்போகிறார் என்பது தெரியவந்துள்ளது.