நடிகை ரம்பா
நடிகை ரம்பா, உழவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர்.
அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், சிவசக்தி, செங்கோட்டை, அருணாச்சலம், ராசி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, அன்புடன் என தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
கடந்த 2010ல் பிரகாஷ்ராஜ் உடன் இணைந்து விடியும் வரை கத்தி என்ற படத்தில் நடித்தார், 3 மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகவில்லை.
பின் 2010ம் ஆண்டு இலங்கை தமிழர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்துகொண்டு 3 குழந்தைகளை பெற்றார்.
லேட்டஸ்ட் வீடியோ
எப்போதும் தனது இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ரம்பா ஒரு கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தனது Farm Houseல் வளர்ந்துள்ள ஆப்பிள் மரத்தை காட்டி அதில் இருந்து ஒரு ஆப்பிளை பறித்து சாப்பிடுகிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள், ஒரு ஆப்பிளே இன்னொரு ஆப்பிளை சாப்பிடுகிறதே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.