புஷ்பா 2
புஷ்பா அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதிலும் குறிப்பாக ஹிந்தி ரசிகர்களை மிகவும் கவர அங்கு முதல் பாகம் சுமார் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் புஷ்பா இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 570+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதிலும் இப்படம் தளபதி விஜய்யின் கோட் படத்தின் மொத்த வசூலையும் 3 நாளில் தாண்டியுள்ளது, அதோடு ஹிந்தியில் இப்படம் ரூ 500 கோடி வரை வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.