சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர் சிறகடிக்க ஆசை.
மனோஜ்-விஜயா நகையை திருடிய விஷயம் தான் இப்போது பரபரப்பாக செல்கிறது. மனோஜ்-ரோஹினி இருவரும் ஜீவா கொடுத்த பணத்தில் மிச்சம் இருந்த 2 லட்சத்தை வீட்டில் முத்துவிடம் கொடுத்துவிடுகிறார்கள்.
அந்த பணத்தை வைத்து மீனா ஒரு கார் வாங்க யோசனை கூற முத்துவும் புதிய கார் வாங்கும் வேலையை கவனிக்கிறார். இன்னொரு பக்கம் விஜயாவிடம் வீட்டு மருமகள்கள் அண்ணாமலையிடம் பேச கூறுகின்றனர்.
அதோடு ஸ்ருதி விஜயா செய்த தவறை போல்டாக அவரிடம் கூறுகிறார்.
அடுத்த எபிசோட்
இந்த நிலையில் நாளைய எபிசோடுக்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் விஜயா, பார்வதி வீட்டிற்கு சென்று ஸ்ருதி குறித்து கோபமாக கூறுகிறார்.
இந்த ஸ்ருதியை அடக்கி வைக்க வேண்டும், இல்லையென்றால் எனது மகனையும் ஆட்டி வைத்து என்னையும் அடக்கிவிடுவாள். அதற்கு ஸ்ருதியை முதலில் ஏதாவது செய்ய வேண்டும் என கூற பார்வதி ஷாக் ஆகிறார். இதோ அந்த புரொமோ,