பூவா தலையா
சன் தொலைக்காட்சியில் ஒரு விஷயம் பஞ்சமே இல்லாமல் உள்ளது, வேறுஎன்ன தொடர்கள் தான்.
திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான தொடர்கள் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாக இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. ஒருநாள் கூட ரெஸ்டே இல்லாமல் சீரியல்கள் சன் டிவியில் வருகிறது.
டிஆர்பியில் தொடர்கள் சொப்புகிறதா உடனே அதனை முடித்து கைவசம் வைத்துள்ள புதிய தொடரை களமிறக்குகிறார்கள்.
முடிந்த தொடர்
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் சில புதுமுகங்கள் கொண்டு ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் பூவா தலையா. தொடர் சமீபகாலமாக டிஆர்பியில் சொதப்ப தற்போது முடிவுக்கும் கொண்டு வந்துள்ளனர்.
218 எபிசோடுகளுடன் இன்று தொடர் அதிரடியாக முடிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கதைக்களத்தை கொஞ்சம் மாற்றி தொடரை தொடர்ந்திருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.