பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் சில வருடங்களுக்கு முன் வந்த நிகழ்ச்சி.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது, இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற சீசனும் ஒளிபரப்பானது.
கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் 8வது சீசன் குறித்த பேச்சு ரசிகர்களிடம் அதிகம் வந்துள்ளது.
ஆனால் இந்த 8வது சீசனை தான் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுவிட்டார், அடுத்து யார் தொகுப்பாளர் என்ற பேச்சு வார்த்தை இன்னமும் நடந்து வருவதாக தெரிகிறது.
பிக்பாஸ் பிரதீப்
பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டு மக்களின் மனதை வென்ற ஒரு போட்டியாளர்கள் என்றால் அது பிரதீப் ஆண்டனி தான். அவர் நன்றாக விளையாடி வர சில காரணங்களால் கமல்ஹாசன் ரெட் கார்ட்டு கொடுத்து அவரை வெளியேற்றினார். ,
இந்நிகழ்ச்சிக்கு பிறகு பிரதீப் படங்கள் கமிட்டாவது என பிஸியாக இருக்க கடந்த ஜுன் மாதம் தனது காதலியை நிச்சயதார்த்தம் செய்தார். அதன்பின் திருமணம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
அவரது திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பிரதீப் பேசும்போது, காசு வந்தாதான் கல்யாணம் என்பதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறேன்.
இப்போது சின்ன சின்ன நிகழ்ச்சிகளை எடுத்து செய்துவருகிறேன், கண்டிப்பாக பணம் வந்த பிறகுதான் திருமணம் என கூறியுள்ளார்.