Thursday, December 26, 2024
Homeசினிமாஅதை செய்வதற்கு பணம் உள்ளது.. அதிரடி பதிலளித்த நடிகை சாய் பல்லவி

அதை செய்வதற்கு பணம் உள்ளது.. அதிரடி பதிலளித்த நடிகை சாய் பல்லவி


நடிகை சாய் பல்லவி 

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சாய் பல்லவி. ‘பிரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தன் மூலம் திரையுலகில் பிரபலமான இவர் ‘தியா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மருத்துவருக்கு படித்து விட்டு நடிப்பு, நடனம் என அனைத்திலும் மிகவும் சிறப்பாக பணியாற்றி வரும் சாய் பல்லவி அடுத்தடுத்து தமிழில் ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’ போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து பல ரசிகர்களை சம்பாதித்தார்.

அதை செய்வதற்கு பணம் உள்ளது.. அதிரடி பதிலளித்த நடிகை சாய் பல்லவி | Sai Pallavi Has Money To Help

தற்போது, இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 31, அதாவது தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆகா உள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் நடிகை சாய் பல்லவியின் கேரக்டர் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதிரடி பதில்

தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு கலந்து கொண்டு வருகின்றனர், அந்த வகையில், தற்போது பேட்டி ஒன்றில் சாய் பல்லவி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அதில், “நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள் இருப்பினும் நான் என் குடும்பத்தை பணக்கார குடும்பம் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன். அதற்கு முக்கிய காரணம் மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு எங்களிடம் பணம் இருந்தது. தற்போது, தேவை உள்ளவர்களுக்கு உதவும் அளவிற்கு பணம் உள்ளது. அதை நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments