ராசி கண்ணா
தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராசி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ராஷி கன்னா நடித்து சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ஹிந்தியில் த சபர்மதி ரிப்போர்ட், தெலுங்கில் ‘தெலுசு கடா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ராசி கண்ணா, ” எனக்கு மகேஷ் பாபுவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை பலமுறை தெரிவித்துவிட்டேன். எங்களுடைய காம்போ சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்து பிரபாஸுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது” என்று ராசி கண்ணா தெரிவித்துள்ளார்.