பாண்டியன் ஸ்டோர்ஸ்
பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போல் சீரியல் நடிகைகள் தான் எங்கள் கண்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வெள்ளித்திரையை விட சின்னத்திரை நாயகிகளுக்கு தான் ரசிகர்களிடம் மவுசு கூடுகிறது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசனில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் Vj தீபிகா.
ஆரம்பத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பின் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியேற மீண்டும் கடைசியில் அவரே நடித்தார்.
நடிகையின் பேட்டி
இந்த நிலையில் விஜே தீபிகா ஒரு பேட்டியில் போல்டான விஷயத்தை பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், பீரியட்ஸ் நேரமாக இருந்தால் கூட நான் கோவிலுக்கு செல்வேன், சாமி கும்பிடுவேன், பூஜை அறைக்கும் செல்வேன். என்னை பொருத்தவரை என்னுடைய கடவுள் எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் என்னை ஏற்றுக்கொள்வார், என்னை எப்போதும் அவர் ஒதுக்க மாட்டார்.
கடவுளே ஒதுக்காத போது என்னை ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
நார்மலான நாள் போலவே நான் பீரியட்ஸ் நாளிலும் பூஜை அறைக்கு செல்வேன், விபூதி குங்குமம் வைத்து கொள்வேன், நான் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று என்னிடம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று போல்டாக கூறியுள்ளார்.
அவரின் இந்த பேட்டிக்கு பலர் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டீவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.