Thursday, April 3, 2025
Homeசினிமாஅனுஷ்கா அதுக்கு மட்டும் தான் லாயக்கு.. பேசியவர்களுக்கு படங்கள் மூலம் பதிலடி கொடுத்த நடிகை

அனுஷ்கா அதுக்கு மட்டும் தான் லாயக்கு.. பேசியவர்களுக்கு படங்கள் மூலம் பதிலடி கொடுத்த நடிகை


நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். ஆனால் அவர் சைஸ் ஸீரோ படத்திற்காக உடல் எடையை அதிகரித்த நிலையில் அதன் பிறகு குறைக்க முடியாமல் தவித்தார்.

அதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். தற்போது மீண்டும் படிப்படியாக பிசியாக படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார் அனுஷ்கா.

அதுக்கு மட்டும் தான் லாயக்கு

அனுஷ்கா ஷெட்டி பல வருடங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி இருக்கிறது. அனுஷ்கா கெரியரில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாக இருந்தது அருந்ததீ.


அந்த படத்தில் அனுஷ்கா கமிட் ஆனபோது சிலர் அந்த ரோலுக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் என கூறினார்களாம்.


“இவ்வளவு பெரிய படம் எடுக்கிறாய். அதில் எதற்கு அனுஷ்கா. அவர் எல்லாம் கவர்ச்சி காட்ட மட்டும் தான் லாயக்கு” என பேசினார்களாம். ஆனாலும் இயக்குனர் தன் மீது நம்பிக்கை வைத்து படத்தில் நடிக்க வைத்ததாக அனுஷ்கா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். 

அனுஷ்கா அதுக்கு மட்டும் தான் லாயக்கு.. பேசியவர்களுக்கு படங்கள் மூலம் பதிலடி கொடுத்த நடிகை | Anushka Shetty Gets Angry About Remarks

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments