டிமாண்டி காலனி
கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் மிரள வைத்த திரைப்படம் டிமாண்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.
முதல் பாகத்தை தொடர்ந்து கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி 2 வெளிவந்தது. ஆம், கடந்த ஆண்டு டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் அருள்நிதி உடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.
டிமாண்டி காலனி 3
இப்படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்காக துவக்கத்தை மிரட்டலான முறையில் வழங்கியிருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இதனால் டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், டிமாண்டி காலனி 3 திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் துவங்கிவிட்டதாம். அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.