ப்ரியா அட்லீ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று முக்கியமாக நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ப்ரியா.
இவரும் இயக்குனர் அட்லீயும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். எந்த ஒரு நிகழ்ச்சியோ, பட நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் அட்லீ தனது மனைவி ப்ரியாவை உடன் அழைத்து வருவார்.
சமீபத்தில் கூட ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்திற்கு தனது மனைவியை அழைத்து சென்றார்.
ப்ரியா வீடியோ
இந்த நிலையில் நடிகை ப்ரியா தனது இன்ஸ்டாவில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்து ஒரு வீடியோவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்ததும் ரசிகர்கள் அவர் புதிய தொழிலை தொடங்கும் அறிவிப்பாக தான் இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவரது பதிவு,