நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் கடந்த 2016ம் ஆண்டு ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நல்ல தமிழ் பேசக்கூடிய ஒரு நடிகை நிவேதா பெத்துராஜ்.
உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் மற்றும் பிரவு தேவாவுடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் பருவு எனும் வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது.
நடிகையின் பேட்டி
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை, தற்போது வெப் சீரியஸ்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில், நெகட்டீவாக தான் எதையாவது நினைத்தால் அப்படியே நடந்துவிடும்.
என்னோட பாய்ஃபிரெண்ட் என்னை ஏமாற்றிவிடுவான், பாய்ஃபிரெண்ட் சீட் பண்ணப் போறான் நினைச்சேன் உடனடியாக பாய் ஃபிரெண்ட் ஏமாத்திட்டான் என பேசியுள்ளார்.