தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் பேசிக்கொண்டிருப்பது அமரன் படத்தை பற்றி தான். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்து இருந்த இந்த படம் 150 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டது.
பாசிட்டிவ் ஆக படத்தை பற்றி பல பிரபலங்களும் பேசி வருவதால் தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டமும் அதிகரித்து இருக்கிறது.
இயக்குனர் சம்பளம்
அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.
அவருக்கு மட்டும் 6 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டு இருக்கிறதாம். அமரன் படம் பெரிய ஹிட் ஆகி இருப்பதால் அவரது அடுத்த படத்திற்கு சம்பளம் இதை விட இரண்டு மடங்கு அதிகரிக்கலாம்.
ராஜ்குமார் பெரியசாமி அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.