அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போது கட்சி செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட எழுத்துமூல முறைக்கு மேலதிகமாக இலகு முறையாக கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுக்கப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.