Sunday, December 22, 2024
Homeசினிமாஅரவிந்த் சாமியுடன் ஒரு படம் கூட நடிக்காமல் இருந்தது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை மீனா

அரவிந்த் சாமியுடன் ஒரு படம் கூட நடிக்காமல் இருந்தது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை மீனா


மீனா

நடிகை மீனா, 80 மற்றும் 90களில் முன்னணி நாயகியாக தமிழ் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த நடிகை.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டு பின் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

அதேபோல் இவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய்யின் தெறி படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார், அதன்பின் அரவிந்த் சாமியுடன் ஒரு படம் நடித்தார்.

அதன்பின் நடிப்பு இப்போதைக்கு வேண்டாம் படிப்பு முக்கியம் என முடிவு எடுத்திருக்கிறார்.

நடிகை பேட்டி

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை மீனா, நான் எத்தனையோ நடிகர்களோடு நடித்திருக்கிறேன், ஆனால் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது அரவிந்த்சாமியுடன் தான், ஆனால் அவருடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.

அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டு கொண்டிருந்தேன். அப்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது, ஆனால் எனக்கு கால்ஷீட் பிரச்சனை நடிக்க முடியவில்லை.

என் மகள் பாஸ்கர் என்ற ராஸ்கல் படத்தில் அவருடன் நடித்துவிட்டார். அப்பட படப்பிடிப்பு செல்லும் போது நான் நடிக்க ஆசைப்பட்ட விஷயத்தை கூறினேன், கண்டிப்பாக நடக்கும் என அரவிந்த் சாமி கூறியதாக நடிகை பேசியிருக்கிறார். 

அரவிந்த் சாமியுடன் ஒரு படம் கூட நடிக்காமல் இருந்தது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை மீனா | Actress Meena About Not Acted With Arvind Saamy



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments