பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். குறைந்த வாக்குகள் பெற்று அவர் வெளியேற்றப்படுவதாக விஜய் சேதுபதி கார்டை காட்டி அறிவித்தார்.
அவரும் எந்த வருத்தமும் இல்லாமல் ஜாலியாக வெளியில் கிளம்பிவிட்டார். மற்ற போட்டியாளர்கள் வருத்தமாக பேசினாலும் அதெல்லாம் வேண்டாம் என சொல்லி அவர் நடையை கட்டினார்.
வெளியில் வந்த அவரிடம் விஜய் சேதுபதி பேசும்போது தன்னை விமர்சிக்கும் படி கூறினார். ‘செஞ்சிட்டீங்க சார்’ என அவர் விஜய் சேதுபதியை பாராட்டினார்.
போட்டியாளர்களை விளாசிய ரவீந்தர்
அதன் பிறகு வீட்டில் இருப்பவர்கள் உடன் ரவீந்தரை பேச வைத்தார் விஜய் சேதுபதி. “இப்போ அன்பை பொழிவாங்க பாருங்க” என ரவீந்தர் சொன்னது போலவே உள்ளே இருப்பவர்கள் அனைவரும் ரவீந்தரை மிஸ் செய்வதாக கூறினார்கள்.
அதற்கு பிறகு reviewer ஆக ஒவ்வொரு போட்டியாளராக விமர்சிக்கும்போது விஜய் சேதுபதி கேட்டார்.
“அர்னவ் நீ பக்கா fake.”
“ரஞ்சித் சார்.. சாமி, தங்கம் என சொல்வது strategy தான்”
“தீபக்.. எதிரியை முன்னாடி அடிக்கணும்.. பின்னாடி அடிக்க கூடாது”
“அருண் பிரசாத் நீ innocent மாதிரி நடிக்காத”
“சத்யா இந்த ஷோவுக்கு பாடி முக்கியமில்லை, mind தான் வேணும்”
“VJ விஷால் நீ தான் என்னை சமைச்சே கொன்னுட்டடா. நல்லா இருக்கு என வேறு வழி இல்லாமல் சொன்னேன் டா. இந்த வீட்டில் ஒரே ஒரு entertainer நீ தான்”.
“ஜெப்ரி வாயை பார்த்து பயன்படுத்து. இது உன் வாழ்க்கையையே மாத்திடும்”.
“பவித்ரா நீ இந்த கேம்-ல் real ஆக இரு.”
“சௌந்தர்யா உட்கார்ந்து பெஞ்ச் தேய்க்குறதை நிறுத்து. டான்ஸ் ஆடுவது, சமைப்பது, தூங்குவது மட்டும் கேம் இல்லை.”
“தர்ஷா நீ விளையாடுறது பாதி fake.. நீ fake என்பது உள்ளே இருந்த எனக்கு பச்சையா தெரிந்தது.”
“சுனிதா நீ honest, real. தமிழ்நாடு உன்னை கொண்டாடும்.”
“தர்ஷிகா நீ செம கேடி. பயங்கரமாக twist பண்ணி விளையாடுற. Manipulative ஆக இருக்காதே.”
“ஜாக்குலின் நான் நம்புற இரண்டாவது real person நீ தான்.”
“RJ ஆனந்தி பயந்து பயந்து ரொம்ப நாள் தள்ள முடியாது. சனி ஞாயிறு score செய்வது முக்கியமில்லை. மற்ற 5 நாட்கள் அதை செய்யணும்”.
இப்படி ஒவ்வொரு போட்டியாளர்களையும் ரவீந்தர் தாக்கி பேசியது, அவரது சொந்த கருத்து மட்டுமே என விஜய் சேதுபதி அதன் பிறகு ஒரு விஷயத்தை disclaimer ஆக பதிவு செய்தார்.