புஷ்பா 2
நடிகர் அல்லு அர்ஜுன், தெலுங்கு சினிமாவின் டாப் நாயகனாக வலம் வரும் பிரபலம்.
இதுவரை தெலுங்கு சினிமா பிரபலங்கள் யாரும் வாங்காத தேசிய விருதை புஷ்பா படத்திற்காக சிறந்த நாயகன் என விருது வாங்கினார் அல்லு அர்ஜுன்.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் மாஸாக தயாராகி இன்று டிசம்பர் 5 வெளியாகிவிட்டது. படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சூப்பரான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
சோகமான விஷயம்
இந்த நிலையில் புஷ்பா 2 படம் பார்க்க வந்தவருக்கு ஏற்பட்ட சோகமான விஷயம் குறித்து வெளியாகியுள்ளது.
அதாவது, ஐதராபாத்தில் புஷ்பா 2 படம் திரையரங்கம் வந்த ரேவதி (39) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.