ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான். ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், ஹிந்தி மட்டுமின்றி வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வலம் வருகிறார்.
தற்போது, இவர் தமிழில் தக் லைஃப், ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
என்ன ஆனது?
இந்நிலையில், தற்போது திடீர் நெஞ்சுவலி காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த செய்தி தற்போது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.