சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.
திறமை இருந்தால் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து சாதிக்க முடியும் என்பதை காட்டியுள்ளார்.
ஸ்டாண்ட் அப் காமெடியனாக ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின் தொகுப்பாளராக, நடன கலைஞராக என பன்முக திறமையை வெளிக்காட்டி ஒரு விருது விழாவை தொகுத்து வழங்கும் அளவிற்கு வளர்ந்தார்.
பின் அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தவர் ஹீரோவாக உருவெடுத்து இப்போது முன்னணி நாயகனாக கலக்கி வருகிறார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
எமோஷ்னல் பேச்சு
39 வயதாகும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராதனா, குகன் மற்றும் பவன் என்று 3 குழந்தைகள் உள்ளனர்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியை மேடை ஏற்றி, எனக்கு இப்பொழுதும் திரைத்துறையில் பல மன உளைச்சல்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது, எப்போதோ சினிமாவிலிருந்து விலகிவிட வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்து உனக்கு பிடித்ததை நீ செய், நிச்சயம் வெற்றி பெறுவாய் என்று ஊக்குவிப்பது எனது மனைவி தான். எங்களுக்கு 3 குழந்தைகள், 3 பேருமே சிசேரியன் முறையில் பிறந்தவர்கள் தான்.
இருப்பினும் அந்த வலியை தாங்கிக் கொண்டு குழந்தைகளையும் என்னையும் கவனித்து வருகிறார். அவருடன் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தேன், அந்த வலியை பார்க்கும் போது நாம் எல்லாம் என்ன கஷ்டப்படுகிறோம் என தோன்றும்.
எனக்கு பக்கபலமாக இருப்பது ஆர்த்தி தான் என தனது மனைவி குறித்து எமோஷ்னலாக பேசியுள்ளார்.