நடிகர் விஜய்
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் என்ன செய்தாலும் அது உடனே வெளியே தெரிந்துவிடும்.
ஆனால் சிலர் தங்களது விஷயங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனையும் தெளிவாக செய்து வருகிறார்கள். இன்று காலை நடிகர் விஜய்யின் கோட் படத்தின் ஒரு அப்டேட் வந்தது.
அதாவது இன்று மாலை நாளை வெளியாகவுள்ள 3வது பாடலின் குட்டி புரொமோ வெளியாக இருக்கிறது.
நடிகரின் கார்
இந்த நிலையில் விஜய் பற்றி இன்னொரு செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது நடிகர் விஜய் ஆசை ஆசையாய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் விற்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காரை வாங்கும் போது நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தவில்லை என்ற பிரச்சனை எல்லாம் நடந்தது, நமக்கே தெரிந்த விஷயம் தான்.
தற்போது Empire Autos எனும் கார் டீலர்ஷிப்பில் விஜய் பயன்படுத்திய கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் கார் படம் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் வீடியோ பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அது விஜய்யின் கார் தானா, இந்த தகவல் உண்மை என்பது சரியாக தெரியவில்லை.
இந்த கார் தற்போது ரூ. 2.6 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.